கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

வில்-அம்பு சின்னத்தைத் திருடிய திருடனுக்கு பாடம் புகட்ட வேண்டும்: உத்தவ் தாக்கரே

சிவசேனையின் வில் அம்பு சின்னம் திருடப்பட்டு விட்டதாகவும், சின்னத்தைத் திருடியவர்களுக்கு சரியான பாடம் கற்றுத் தர வேண்டும் எனவும் சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

Published On :

சிவசேனையின் வில் அம்பு சின்னம் திருடப்பட்டு விட்டதாகவும், சின்னத்தைத் திருடியவர்களுக்கு சரியான பாடம் கற்றுத் தர வேண்டும் எனவும் சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர்களுடனான கூட்டத்துக்கு முன்னதாக மும்பையில் தனது இல்லம் முன்பு திரண்டிருந்த சிவசேனை ஆதரவாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 

சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு பேரதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. கட்சியின் பெயரினையும், அதன் சின்னமான வில் அம்பினையும் ஷிண்டே தலைமையிலான சிவசேனை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
 

1966 ஆம் ஆண்டு பால் தாக்கரேவால் மண்ணின் மைந்தர்களுக்கு நீதி என்ற தத்துவத்தில் சிவசேனை கட்சி தொடங்கப்பட்டது. சிவசேனை தொடங்கிய காலத்திலிருந்து முதல் முறையாக தாக்கரே குடும்பத்துக்கு கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. 

தனது இல்லத்தின் முன்பு ஆதரவாளர்களை சந்தித்த உத்தவ் தாக்கரே பேசியதாவது: வில் அம்பு சின்னம் திருடப்பட்டிருக்கிறது. சின்னத்தை திருடியவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது. திருடன் பிடிபட்டுவிட்டான். நான் அந்தத் திருடனுக்கு சவால் விடுகிறேன். அந்தத் திருடன் வில் அம்புடன் களத்துக்கு வரும் போது தீப்பந்தத்தினால் பதிலடி கொடுப்போம். சிவசேனை ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொண்டு கட்சியின் ஆதரவாளர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்றார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனைக்கு தீப்பந்தம் சின்னத்தை கடந்த ஆண்டு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த சின்னமே புனேவின் கஸ்பா பெத் மற்றும் சின்ச்வாத் தொகுதிகளின் இடைத்தேர்தல் வரை நீடிக்கும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த இரு தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.