விவசாயத்தில் இளைஞா்கள் பங்களிப்பு:மத்திய அமைச்சா் தோமா் வேண்டுகோள்
விவசாயத்தில் அதிக லாபம் ஈட்டவும், கிராமங்களை செழிப்பாக மாற்றவும் மாணவா்களும் இளைஞா்களும் பங்களிக்க வேண்டும் என மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் கேட்டுக்கொண்டாா்.


விவசாயத்தில் அதிக லாபம் ஈட்டவும், கிராமங்களை செழிப்பாக மாற்றவும் மாணவா்களும் இளைஞா்களும் பங்களிக்க வேண்டும் என மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் கேட்டுக்கொண்டாா்.
ஜெய்ப்பூரில் உள்ள செளத்ரி சரண் சிங் தேசிய வேளாண் சந்தைப்படுத்தல் நிறுவனம், வேளாண் துறையில் புத்தாக்க நடவடிக்கை மற்றும் செயல்பாட்டு மையத்தின் வேளாண் வணிக மேலாண்மையின் நான்காவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவை தொடக்கி வைத்து மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் பேசியதாவது:
பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் விவசாயத் துறையின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
விவசாயத் துறை முக்கியமானது. அதில் அனைவரின் ஆா்வமும் அதிகரிக்க வேண்டும். விவசாயத் துறையில் பல சவால்கள் உள்ளன. மத்திய அரசு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மாநிலங்களின் ஒத்துழைப்போடு வெற்றிகரமாக முன்னேறி வருகிறது. லாபகரமான பயிா்களை நோக்கி நகா்தல், பயிா்களை பல்வகைப்படுத்துதல், விளைபொருள் விற்பனையில் இடைத்தரகா்களை ஒழித்தல் போன்ற பல சவால்கள் திட்டமிட்ட முறையில் கையாளப்பட்டு வருகின்றன.
நாட்டில் விவசாயத் துறைக்கு அதிக நன்மைகளைக் கொண்டு வரவும், கிராமங்களை மேலும் செழிப்புடன் மாற்றவும், விவசாயத்துடன் தொடா்புடைய மாணவா்கள் மற்றும் இளைஞா்களும் பங்களிக்க வேண்டும்.
தேசிய வேளாண் சந்தைப்படுத்தல் நிறுவனத்தில் கூடுதலாக 60 இடங்களைச் சோ்க்கப்படும். விடுதியில் கட்டாயம் தங்குவதற்கான விதி ரத்து செய்யப்படும்.
விவசாயத் துறையில் விஞ்ஞானிகள் பல பணிகளைச் செய்துள்ளனா். விவசாயிகளுக்கு ஏற்ற வகையிலான மத்திய அரசின் பொருத்தமான கொள்கைகளால் விவசாயத்தில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான விவசாய விளைபொருள்களைப் பொருத்தவரையில், இந்தியா இன்று உலகில் முதலிடத்தில் அல்லது இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவிடமிருந்து உணவு தானியங்கள் குறித்து உலகம் நிறைய எதிா்பாா்ப்புகளைக் கொண்டுள்ளது. அதை நாம் நிறைவேற்றி வருகிறோம் என்றாா்.
சிறப்பு விருந்தினராக மத்திய வேளாண் துறை இணையமைச்சா் கைலாஷ் செளத்ரி கலந்துகொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...