லடாக் மக்களின் வாழ்வை எளிதாக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்: பிரதமர் மோடி

லடாக்கில் மக்களின் வாழ்க்கையை எளிதாக்க தனது அரசு அனைத்து விதமான முயற்சிகளையும் எடுத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
லடாக் மக்களின் வாழ்வை எளிதாக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்: பிரதமர் மோடி

லடாக்கில் மக்களின் வாழ்க்கையை எளிதாக்க தனது அரசு அனைத்து விதமான முயற்சிகளையும் எடுத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

லடாக்கின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜம்யாங் செரிங்கின் ட்விட்டர் பதிவினை இணைத்து (டாக் செய்து) பிரதமர் நரேந்திர மோடி இதனை தெரிவித்துள்ளார். ஜம்யாங் செரிங் தனது ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு 4.1 கிலோமீட்டர் நீளம் கொண்ட சின்குன் லா சுரங்கப்பாதையினை வருகிற 2025 ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க ரூ.1681.51 கோடி ஒதுக்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது எனப் பதிவிட்டிருந்தார்.

லடாக்கின் பின் தங்கிய பகுதியான ஜன்ஸ்கர் பகுதியில் உள்ள லுங்னக் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் பிரதமர் நரேந்திர மோடியின் இந்த முடிவுக்கு வரவேற்பு அளித்துள்ளனர். மேலும், பிரதமருக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர் எனவும் ஜம்யாங் பதிவிட்டிருந்தார். 

இந்த டிவிட்டை இணைத்து (டேக் செய்து) பிரதமர் பதிவிட்டதாவது: லடாக் மக்களின் வாழ்க்கையை எளிமையாக்க அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனப் பதிவிட்டுள்ளார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com