மேகாலயாவில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார் அமித்ஷா!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மேகாலயாவுக்குச் சென்று ஷில்லாங்கில் நடைபெறும் தேர்தல் பேரணிகளில் உரையாற்றுகிறார்.


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மேகாலயாவுக்குச் சென்று ஷில்லாங்கில் நடைபெறும் தேர்தல் பேரணிகளில் உரையாற்றுகிறார்.
இதுகுறித்து மேகாலயா பாஜக தலைவர் எர்னஸ்ட் மாவ்ரி கூறுகையில்,
முன்னதாக பிப்.14 அன்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஷில்லாங் சென்ற நிலையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செல்கிறார். அவர்
மேற்கு ஷில்லாங் மற்றும் பைந்தோரம்க்ராவில் இரண்டு தேர்தல் பிரசார கூட்டங்களில் உரையாற்ற உள்ளார்.
ஷா இன்று நாகாலாந்து செல்கிறார், அங்கு அவர் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றுகிறார்.
இம்முறை 60 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடுகிறது. நாகாலாந்துடன் மேகாலயா சட்டப்பேரவைக்கும் பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...