மோடியின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்த மேகாலயா அரசு!

பிரதமர் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டத்திற்கு மேகாலயா அரசு அனுமதி மறுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோடியின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்த மேகாலயா அரசு!

பிரதமர் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டத்திற்கு மேகாலயா அரசு அனுமதி மறுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் கட்சி, பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.

இதனை தொடர்ந்து, வரும் பிப்ரவரி 24ஆம் தேதி  மேகாலயாவில் நடைபெறும் இறுதிகட்டப் பிரசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். ஷில்லாங் சாலையில் ஊர்வலமாக சென்று மோடி பிரசாரம் செய்தபின், துராவில் உள்ள பிஏ சங்மா மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு பாஜக திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், பராமரிப்பு பணி காரணமாக சங்மா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது. கடந்த 2018 தேர்தலில் பாஜக மற்றும் பிராந்திய கட்சிகளின் ஆதரவோடு தேசிய மக்கள் கட்சி ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் ரித்துராஜ் சின்ஹா கூறுகையில், “சங்மா மைதானம் கடந்தாண்டு டிசம்பர் மாதமே முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது நாட்டு மக்கள் அனைவரும் அறிவர். ஆனால், பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக கூறி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளனர். மேகாலயாவில் மோடி அலை வீசத் தொடங்கியுள்ளதை அரசியல் கட்சிகள் தெரிந்து கொண்டதால், மோடியின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com