ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பாஜகவின் வெற்றிக்கு திரிணமூல் உதவுகிறது: மேகாலயத்தில் ராகுல் பிரசாரம்

மேகாலயத்தில் பாஜகவை வலுப்படுத்தவும் அக்கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தவும் திரிணமூல் காங்கிர உதவுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

News image
Updated On :22 பிப்ரவரி 2023, 9:26 pm

DIN

மேகாலயத்தில் பாஜகவை வலுப்படுத்தவும் அக்கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தவும் திரிணமூல் காங்கிர உதவுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். மேகாலய மாநிலம், ஷில்லாங்கில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: 
பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் தங்களுக்குதான் அனைத்து விஷயங்களும் தெரியும் என நினைக்கின்றன. அவர்கள் யாரையும் மதிப்பதில்லை. நாம் அனைவரும் இணைந்து அவர்களிடம் மோத வேண்டும். 
மேகாலய மொழி, கலாசாரம், வரலாற்றை பாஜக தாக்க காங்கிரஸ் அனுமதிக்காது. மாநில கலாசாரத்துக்கும் பாரம்பரியத்துக்கும் மரியாதை அளிக்கும் வகையில் பாரம்பரிய ஆடையை அணிந்து வந்துள்ளேன். இந்த ஆடை மூலம் எனது செயல்பாடு பிரதிபலிக்கிறது.
ஆனால், நான் பிரதமர் மோடிபோல மாநிலக் கலாசார ஆடையை அணிந்துகொண்டு உங்களின் மொழி, மதம், கலாசாரம், வரலாற்றைத் தாக்கிப் பேசினால் அது உங்களை இழிவுப்படுத்துவது போலாகும்.
மேற்கு வங்கத்தில் வன்முறைகளும், ஊழல்களும் நிகழும் திரிணமூல் காங்கிரஸின் வரலாற்றை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் கோவாவில் நடைபெற்ற தேர்தலின்போது பல கோடி ரூபாய் செலவழித்தனர். ஆனால், அவர்களின் சிந்தனை பாஜகவுக்கு உதவியாக இருந்தது. அதே சிந்தனையை மேகாலயத்திலும் செய்கின்றனர். 
மேகாலயத்தில் பாஜகவை வலுப்படுத்துவதும் அக்கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதும்தான் அவர்களின் சிந்தனையாகும். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.