கர்நாடகத்தைத் தென்னிந்திய முதல் மாநிலமாக மாற்றுவோம்: அமித் ஷா
கர்நாடக மாநிலத்தை ஊழலில் இருந்து விடுவித்து தென்னிந்தியாவின் முதல் மாநிலமாக மாற்றுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.


கர்நாடக மாநிலத்தை ஊழலில் இருந்து விடுவித்து தென்னிந்தியாவின் முதல் மாநிலமாக மாற்றுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
சந்தூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஷா கூறுகையில்,
பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா மீது கர்நாடக மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தால் ஊழலை விடுவித்து தென்னிந்திய முதல் மாநிலமாக கர்நாடகாவை மாற்றுவோம்.
மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான அமைப்பு மற்றும் ஜேடி(எஸ்) கட்சிகள் மக்களுக்கு நல்லது செய்ய முடியாத கட்சிகள் என்று குற்றம் சாடினார்.
ஒருபுறம் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக இந்தியாவை வலுப்படுத்துகிறது, மறுபுறம் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அதை சீரழித்து வருகிறது.
பிரதமர் மோடி மற்றும் எடியூரப்பாவுக்கு ஒருமுறை வாய்ப்பளியுங்கள், கர்நாடகாவை ஊழலில் இருந்து விடுவித்து தென்னிந்தியாவின் முதல் மாநிலமாக மாற்றுவோம் என்று அவர் கூறினார்.
கர்நாடகத்தில் மே மாதத்திற்குள் சட்டப்பேரவை தேர்தல் நிகழ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...