தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பிகார்: அறுவை சிகிச்சை இல்லாமல் கைதியின் வயிற்றில் இருந்து மொபைல் போனை அகற்றிய மருத்துவர்கள் 

கைதி விழுங்கிய மொபைல் போனை எந்த அறுவை சிகிச்சையும் இல்லாமல் வயிற்றில் இருந்து பாட்னா மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். 

News image
கோப்புப் படம்.
Updated On :24 பிப்ரவரி 2023, 10:31 am

DIN

கைதி விழுங்கிய மொபைல் போனை எந்த அறுவை சிகிச்சையும் இல்லாமல் வயிற்றில் இருந்து பாட்னா மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். 

பிகார், மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டச் சிறையில் கைஷார் அலி என்பவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக சிறையில் உள்ளார். அண்மையில் அவருக்கு திடீரென கடுமையான வலிற்று வலி ஏற்பட்டுள்ளது.சனிக்கிழமை சிறையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது அதிகாரிகளுக்குப் பயந்து மொபைல் போனை விழுங்கியதாக அவர் தெரிவித்திருக்கிறார். 

இதனால் அதிர்ச்சியடைந்த சிறை அதிகாரிகள் உடனடியாக கோபால்கஞ்ச் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கைதி வயிற்றில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அதில் வெளிநாட்டு துகள்கள் இருப்பது தெரியவந்தது என்று கோபால்கஞ்ச் சிறை கண்காணிப்பாளர் மனோஜ் குமார் தெரிவித்துள்ளார். பின்னர் அந்த கைதி மேல் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

அதைத்தொடர்ந்து எண்டோஸ்கோபிக் உதவியுடன் கைதி விழுங்கிய மொபைல் போனை வயிற்றில் இருந்து பாட்னா மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். இதுகுறித்து இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கழகத்தின் மருத்துவ கண்காணிப்பாளர் மணீஷ் மண்டல் கூறுகையில், புதன்கிழமையன்று எண்டோஸ்கோபிக் இயந்திரத்தின் உதவியுடன் எந்த அறுவை சிகிச்சையும் இன்றி இந்த அளவிலான பொருள் மீட்டெடுக்கப்பட்டது இதுவே முதல் முறை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.