காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-ஆவது மாநாடு தொடங்கிய நிலையில், முதல் அமர்வில் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பங்கேற்கவில்லை.
சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-ஆவது மாநாடு இன்றுமுதல் மூன்று நாள்களுக்கு நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தோ்தலுக்கான தெளிவான வியூகம் வகுப்பதற்காக இந்தக் கூட்டம் கூடியுள்ளது.
மூன்று நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகளை ஒன்று சோ்ப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடும்ப அரசியல் கட்சியாக காங்கிரஸ் உள்ளதாக என்ற தொடா் குற்றச்சாட்டுகளைப் போக்க நேரு-காந்தி குடும்பத்தினா் அல்லாத மல்லிகாா்ஜுன காா்கே தலைவா் பொறுப்பை ஏற்றாா்.
இதைத்தொடா்ந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை நடைப்பயணம் மேற்கொண்டாா். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அருணாசல பிரதேசம் முதல் குஜராத் வரையில் நடைப்பயணம் மேற்கொள்வதற்கான முடிவு காரிய கமிட்டி கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது.
இதற்கிடையே முதல் நாளான இன்று மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் வழிகாட்டுதல் குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்த்தில் கட்சியில் உயா்பதவிகளுக்குத் தோ்தல் நடத்த வேண்டுமா இல்லையா என முடிவு எடுக்கபட உள்ளது.
காரியக் கமிட்டிக்கு தோ்தல் மூலமே தோ்வு செய்யப்பட வேண்டும் என்று இளைஞா்களும், நியமனம் மூலமே நடைபெற வேண்டும் என்று மூத்த தலைவா்களும் வலியுறுத்தி வருவதால் காந்தி குடும்பத்தினரின் தலையீடு வழிகாட்டுதல் குழு கூட்டத்தில் இருக்கக் கூடாது என்பதற்காக காந்தி குடும்பத்தினர் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வழிகாட்டுதல் கூட்டம் நிறைவு பெற்ற பிறகு பிற்பகலில் நடைபெறும் பிற அமர்வுகள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பங்கேற்பார்கள் எனத் தெரிகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வனத் துறை சாா்பில் 2 ஒப்பந்தங்கள் கையொப்பம்

தொகுதி மறுவரையறைக்கு முன்பே மகளிா் இடஒதுக்கீடு அமலாக்கம்? - மத்திய அரசு பரிசீலனை

காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டம்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் எச்சரிக்கை
ரூ.228 கோடி வங்கி மோசடி வழக்கு: அனில் அம்பானி மகனிடம் ஆறரை மணி நேரம் சிபிஐ விசாரணை
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

