மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

30% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது: ஃபிளிப்கார்ட்

மின்னணு வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட், தனது 30 சதவிகித ஊழியர்களுக்கு கடந்த 2022 ஜனவரி - டிசம்பர் காலத்துக்கான ஊதிய உயர்வை அளிக்கப்போவதில்லை என்றுஅ றிவித்துள்ளது.

30% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது: ஃபிளிப்கார்ட்

Published On :

புது தில்லி: மின்னணு வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட், தனது 30 சதவிகித ஊழியர்களுக்கு கடந்த 2022 ஜனவரி - டிசம்பர் காலத்துக்கான ஊதிய உயர்வை அளிக்கப்போவதில்லை என்றுஅ றிவித்துள்ளது.

இது தொடர்பாக ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால், ஃபிளிப்கார்ட்டில் பணியாற்றும் சுமார் 4,500 ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

தற்போதைய நிலையற்ற பொருளாதார சூழலில், நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மிகுந்த ஆக்கத்தோடு பணி செய்ய வைப்பதை நிறுவன மேலாண்மை கவனத்தில் கொண்டுள்ளது என்று ஊழியர்களுக்கு, நிறுவன முதன்மை மக்கள் தொடர்பு அலுவலர் அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் வழங்கப்படும் ஊதிய உயர்வானது, இந்த ஆண்டு 30 சதவிகித ஊழியர்களுக்கு வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒருபக்கம் பல்வேறு பொருளாதார காரணிகளால், ஃபிளிப்கார்ட் நிறுவனம் தனது பணிப் பலத்தை குறைத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.