எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஜி20: பெங்களூருவில் முதலாவது நிதியமைச்சர்கள் கூட்டம் தொடங்கியது!

இந்தியாவின் தலைமையில், ஜி20 நாடுகளின் முதலாவது நிதியமைச்சா்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநா்கள் கூட்டம், பெங்களூருவில் தொடங்கியுள்ளது.

News image
Updated On :24 பிப்ரவரி 2023, 4:39 am

DIN

இந்தியாவின் தலைமையில், ஜி20 நாடுகளின் முதலாவது நிதியமைச்சா்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநா்கள் கூட்டம், பெங்களூருவில் தொடங்கியுள்ளது.

பெரும் பொருளாதார நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் தலைமையை இந்தியா வகித்து வருகிறது. இந்தியத் தலைமையின்கீழ் முதலாவது ஜி20 நிதியமைச்சா்கள், மத்திய வங்கி ஆளுநா்கள் கூட்டம் இன்றும், நாளையும் கா்நாடக மாநிலம், பெங்களூரில் நடைபெறுகிறது.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மற்றும் இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் ஆகியோா் இணைந்து இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கி வருகின்றனர்.

ஜி20 உறுப்பு நாடுகளின் நிதியமைச்சா்கள், மத்திய வங்கி ஆளுநா்கள், சா்வதேச அமைப்புகளின் தலைவா்கள் உள்பட மொத்தம் 72 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ள இந்த கூட்டத்தில் காணொலி மூலம் பங்கேற்று அனைவரையும் வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை உரையாற்றினர்.

Story image

உலகின் சில முக்கிய பொருளாதாரப் பிரச்னைகளைத் தீா்ப்பதற்கான நடைமுறை, ஆக்கபூா்வ அணுகுமுறைகள் குறித்து அமைச்சா்கள் மற்றும் ஆளுநா்களிடையே முக்கியத்துவம் வாய்ந்த கருத்துப் பரிமாற்றம் நடைபெறும் வகையில், இந்தக் கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

21 ஆம் நூற்றாண்டின் உலகளாவிய சவால்களை எதிா்கொள்ள பல்வேறு நாடுகளின் வளா்ச்சி வங்கிகளை வலுப்படுத்துதல், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், நிதி உள்ளடக்கம் மற்றும் உற்பத்தி அதிகரிப்பு போன்றவை இந்த அமா்வில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. சுகாதாரம் மற்றும் சா்வதேச வரிவிதிப்பு தொடா்பான பிரச்னைகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.