பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

நாகாலாந்து, மேகாலயாவில் நாளை வாக்குப் பதிவு!

நாகாலாந்து, மேகாலயாவில் நாளை திங்கள்கிழமை(பி.27) ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Published On :


புதுதில்லி: நாகாலாந்து, மேகாலயாவில் நாளை திங்கள்கிழமை(பி.27) ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து பேரவைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், திரிபுராவில் கடந்த 16 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. மேகாலயா, நாகாலாந்தில் நாளை திங்கள்கிழமை(பிப்.27) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

இந்த மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது. 

நாகாலாந்து, மேகாலயாவில் சனிக்கிழமை மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டன.

மொத்தம் 120 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்து, மேகாலயா பேரவைக்கு மொத்தம் 558 பேர் போட்டியிடுகின்றனர்.  

ஆளும் தேசிய மக்கள் கட்சி(என்பிபி) 57 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் 56 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. பாஜக, காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. நாகாலாந்தில், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிடுகிறது. 

நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

திரிபுரா தேர்தலுடன் இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.