நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிற்பகல் 3 மணி நிலவரப்படி: மேகாலயத்தில் 63.91%, நாகாலாந்தில் 72.99% வாக்குகள் பதிவு!

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயத்தில் 63.91 சதவீதமும், நாகாலாந்தில் 72.99 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. 

News image
Updated On :27 பிப்ரவரி 2023, 11:25 am

DIN

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயத்தில் 63.91 சதவீதமும், நாகாலாந்தில் 72.99 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. 

இரு மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

60 தொகுதிகளைக் கொண்ட மேகாலயத்தில், சோஹியாங் தொகுதியில் ஒரு வேட்பாளா் மரணமடைந்ததால், 59 தொகுதிகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது. 

இதேபோல் 60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்தில், அகுலுடோ தொகுதியில் பாஜக வேட்பாளா் போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்ட நிலையில், 59 தொகுதிகளில் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில்  மேகாலயத்தில் 63.91 சதவீதமும், நாகாலாந்தில் 72.99 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.