ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு ஆம் ஆத்மி போராட்டம்!

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

News image
பெங்களூருவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியினர்.
Updated On :27 பிப்ரவரி 2023, 10:39 am

DIN

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தில்லியில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தில்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) நேற்று(ஞாயிற்றுக்கிழமை) கைது செய்தது. முன்னதாக அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக மணீஷ் சிசோடியா, இன்று(திங்கள்கிழமை) சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். 

இதனிடையே மணீஷ் சிசோடியா கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர், பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்த்தை ஆம் ஆத்மி கட்சியினர் முற்றுகையிட்டுள்ளனர். அதுபோல, பெங்களூருவில் உள்ள பாஜக அலுவலகத்தையும் ஆம் ஆத்மி கட்சியினர் முற்றுகையிட்டு கண்டனப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.