கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,670 ஆகக் குறைந்துள்ளது!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 173 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 2 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். 
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 173 பேருக்கு கரோனா! 
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 173 பேருக்கு கரோனா! 
Published on
Updated on
1 min read


புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 173 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 2 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். 

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 173 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,46,78,822 ஆக உள்ளது. மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,30,707 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புக்கு கேரளம், உத்தரகாண்டில் தலா ஒருவர் இறந்துள்ளனர். 

நாட்டில் இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை  4,41,45, 445 ஆக அதிகரித்துள்ளது, மீட்பு விகிதம் 98.80 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1 சதவீதமாக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,670 ஆகக் குறைந்துள்ளது. 

நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2020 ஆகஸ்ட் 7 இல் 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23 இல் 30 லட்சத்தையும், செப்டம்பர் 5 இல் 40 லட்சத்தையும், செப்டம்பர் 16 இல் 50 லட்சத்தையும் தாண்டியது.

இது செப்டம்பர் 28 இல் 60 லட்சத்தையும், அக்டோபர் 11 இல் 70 லட்சத்தையும் கடந்தது, அக்டோபர் 29 இல் 80 லட்சத்தையும், நவம்பர் 20 இல் 90 லட்சத்தையும் தாண்டி, டிசம்பர் 19 இல் ஒரு கோடியைத் தாண்டியது.

2021 மே 4 இல் இரண்டு கோடியையும், ஜூன் 23 இல் மூன்று கோடி வழக்குகளையும், 2022 ஜனவரி 25 இல் நான்கு கோடி வழக்குகளையும் தாண்டியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com