

ஜெய்ப்பூர்: கரோனா பேரிடர் காரணமாக மதுபான விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கடந்த இரண்டு நாள்களில் மட்டும் ராஜஸ்தான் மக்கள் ரூ.111 கோடிக்கு மதுபானங்களை வாங்கி, புத்தாண்டைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் 87 கோடிக்கு வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனையான நிலையில், பீர்கள் மட்டும் ரூ.19.95 கோடிக்கு விற்பனையாகியிருக்கிறதாம்.
2022ஆம் ஆண்டில் நடந்த மதுவிற்பனையில், கடந்த இரண்டு நாள்களில் கடந்த மதுவிற்பனைதான் புதிய உச்சமாகக் கருதப்படுவதாக கலால் துறை தெரிவித்துள்ளது. கரோனா பேரிடர் காலங்களில் சற்று சுணக்கமடைந்திருந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள், மீண்டும் களைகட்டியிருப்பதையே இது காட்டுவதாகக் கூறப்படுகிறது.
கரோனா பேரிடர் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டிருந்ததால் 2021ஆம் ஆண்டின் கடைசி இரண்டு நாள்களில் ராஜஸ்தானில் 77.82 கோடி ரூபாய்க்கு மதுபான விற்பனை நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் மதுபான விற்பனை குறித்த நிலவரங்கள் இன்னமும் வெளிவராத நிலையில், ராஜஸ்தான் முதலிடத்தில் இருக்குமா அல்லது தென்னிந்திய மாநிலங்கள் முதலிடத்தைப் பிடித்து ராஜஸ்தானை பின்னுக்குத் தள்ளுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.