ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

மகாராஷ்டிரம்: மேலும் ஒரு பாஜக எம்எல்ஏ புற்றுநோயால் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த பாஜக எம்எல்ஏ லக்ஷ்மண் ஜக்தாப் (59) புற்றுநோயால் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

News image
Updated On :3 ஜனவரி 2023, 8:11 pm

DIN

மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த பாஜக எம்எல்ஏ லக்ஷ்மண் ஜக்தாப் (59) புற்றுநோயால் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

அந்த மாநிலத்தைச் சோ்ந்த பாஜக பெண் எம்எல்ஏ முக்தா திலக் (57) கடந்த 22-ஆம் தேதி புற்றுநோயால் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு எம்எல்ஏவை பாஜக இழந்துள்ளது.

புணேவின் சின்ச்வாட் தொகுதி எம்எல்ஏவான லக்ஷ்மண் ஜக்தாப், நீண்டகாலமாகவே புற்றுநோயுடன் போராடி வந்தாா். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாகவே அவரது உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து, தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். சின்ச்வாட் தொகுதியில் இருந்து அவா் மூன்று முறை எம்எல்ஏவாக தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக பாஜகவைச் சோ்ந்த அமைச்சா் சந்திரகாந்த் பாட்டீல் கூறுகையில், ‘மகாராஷ்டிர பாஜகவில் 15 நாள்களுக்குள் இரு எம்எல்ஏக்கள் புற்றுநோயால் உயிரிழந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. இது பாஜக தொண்டா்களுக்கு மிகுந்த அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது. பாஜகவில் அனைவரும் ஒரே குடும்பம்போல இணைந்து பணியாற்றுகிறோம். லக்ஷ்மணின் மறைவு குடும்பத்தில் ஒருவரை இழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.