தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற காவலர்!
தில்லியில் ரஃபி மார்க் என்ற இடத்தில் காவல்துறை தலைமை கான்ஸ்டபிள் இன்று (ஜனவரி 4ம் தேதி) தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


புதுதில்லி: தில்லியில் காவல்துறை தலைமை காவலர் இன்று (ஜன. 4) தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஃபி மார்க் என்ற இடத்தில் தீக்குளிக்க முயன்ற காவலர், குல்தீப் என அடையாளம் காணப்பட்டுள்ளது. தீக்குளிக்க முயன்ற அவரை அருகில் இருந்த சக காவலர்கள் தடுத்து காப்பாற்றியுள்ளனர்.
இது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், குல்தீப் இதற்கு முன்பும் தீக்குளிக்க முயன்றுள்ளார். அதன் பின்னணி குறித்து தெரியவில்லை என்றனர். இந்நிலையில், அவருக்கு அவரது கழுத்து மற்றும் மார்பில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது என்றனர்.
இது தொடர்பாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், செயலக பாதுகாப்பில் கடமையாற்றிய தலைமை காவலர் தற்போது பணி இடைநீக்கத்தில் உள்ளதாகத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...