இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஓரிரு நாட்களில் ஹிமாசல் அமைச்சரவை விரிவாக்கம்: காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல்

ஹிமாசல் பிரதேசத்தின் அமைச்சரவை இன்னும் ஓரிரு தினங்களில் விரிவாக்கம் செய்யப்படலாம் என காங்கிரஸ் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :6 ஜனவரி 2023, 3:12 pm

DIN

ஹிமாசல் பிரதேசத்தின் அமைச்சரவை இன்னும் ஓரிரு தினங்களில் விரிவாக்கம் செய்யப்படலாம் என காங்கிரஸ் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 

ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அண்மையில் தலைநகர் தில்லியில் ஹிமாசல் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸின் முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

இது குறித்து காங்கிரஸைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: நேற்று மாலை ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் சிங் தில்லி வந்தடைந்தார். அவர் காங்கிரஸின் சில முக்கியத் தலைவர்களுடன் அமைச்சரவை விரிவாக்கம் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டார். இன்னும் ஓரிரு நாட்களில் ஹிமாசல் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படலாம் என்றார்.

அண்மையில், 68 தொகுதிகளைக் கொண்ட ஹிமாசல் சட்டப்பேரவைத் தேர்தலில் 40 தொகுதிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.