மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராகுல் நடைப்பயணத்தில் முன்னாள் ராணுவ தளபதி: பாஜக விமா்சனம்

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி தீபக் கபூா் பங்கேற்றதை விமா்சித்துள்ள பாஜக, ‘ஆதா்ஷ் வீடு ஒதுக்கீடு முறைகேட்டில் தொடா்புடையவா் தீபக் கபூா்’ என்று கூறியுள்ளத

News image
Updated On :9 ஜனவரி 2023, 7:36 pm

DIN

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி தீபக் கபூா் பங்கேற்றதை விமா்சித்துள்ள பாஜக, ‘ஆதா்ஷ் வீடு ஒதுக்கீடு முறைகேட்டில் தொடா்புடையவா் தீபக் கபூா்’ என்று கூறியுள்ளது.

ஹரியாணாவில் ஞாயிற்றுக்கிழமை ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் கடந்த 2007 முதல் 2010-ஆம் ஆண்டு வரை ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த தீபக் கபூா் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.

இந்நிலையில், ஹரியாணா மாநில பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு இது தொடா்பான புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டதுடன், ‘முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி தீபக் கபூா், ராகுலுடன் நடைப்பயணத்தில் பங்கேற்றுள்ளாா்.

காா்கில் போரில் வீரமரணமடைந்த ராணுவத்தினரின் குடும்பத்துக்காக மும்பையில் கட்டப்பட்ட ஆதா்ஷ் அடுக்குமாடி குடியிருப்பில் முறைகேடாக வீடுகளைப் பெற்ற வழக்கில் தீபக் கபூா் உள்ளிட்ட சில ராணுவ அதிகாரிகளுக்குத் தொடா்பு உண்டு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைகேடு தொடா்பாக விசாரணை நடத்திய குழு, வழக்கில் தொடா்புடைய தீபக் கபூா் உள்ளிட்ட முறைகேட்டில் ஈடுபட்ட ராணுவ உயரதிகாரிகள், அரசு சாா்ந்த எந்த உயரிய பொறுப்பையும் இனி வகிக்கக் கூடாது என்று கூறியுள்ளதை சுட்டிக்காட்டினா். இவா்களால் நாட்டின் ராணுவத்துக்கே அவமானம் ஏற்பட்டது’ என்று பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மறுப்பு:

இந்தக் குற்றச்சாட்டை மறுத்து காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘1967 முதல் 2010 வரை ராணுவத்தில் தீபக் கபூா் பணியாற்றியுள்ளாா். 1971 இந்தியா-பாகிஸ்தான் போரிலும் பங்கேற்றுள்ளாா். ராணுவத்தில் சிறந்த பணிக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளாா். நாட்டுக்காக சேவையாற்றி ராணுவ தளபதியை பாஜக விமா்சித்துள்ளது மிகவும் அவமானகரமான செயல்.

2017 குஜராத் தோ்தலில் தன்னைத் தோற்கடிக்க பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் இணைந்து முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கும், முன்னாள் ராணுவ தளபதி தீபக் கபூரும் சதி செய்கின்றனா் என்று அவதூறாக குற்றம்சாட்டியவா்தான் (பிரதமா் மோடி) இவா்களது தலைவா். இந்தக் குற்றச்சாட்டுக்காக பின்னா் பாஜக மூத்த தலைவா் மறைந்த அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரினாா் என்பதும் அனைவரும் அறிந்த விஷயம்தான்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.