கோப்புப் படம்
கோப்புப் படம்

திகார் சிறையில் சட்டப் புத்தகங்களைப் படிக்கும் ஷ்ரத்தா கொலையாளி!

ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரின் காதலன் அஃப்தாப் பூனாவாலா படிப்பதற்காக சட்டப் புத்தகங்களைப் பெற்றுள்ளார்.


ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரின் காதலன் அஃப்தாப் பூனாவாலா படிப்பதற்காக சட்டப் புத்தகங்களைப் பெற்றுள்ளார். மேலும், கடும் குளிர் காரணமாக போர்வைகளையும் பெற்றுள்ளார். 

தில்லியில் உடன் வசித்து வந்த ஷ்ரத்தா வால்கரைக் கொடூரமாகக் கொன்று உடலை 35 துண்டுகளாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசிய வழக்கில், 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து தில்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. 

இதனைத் தொடர்ந்து அஃப்தாப் சிறையில் அடைக்கப்பட்டார். எனினும் படிப்பதற்கு சட்டப் புத்தகங்களையும் குளிருக்காக போர்வையையும் வழங்குமாறு நீதிமன்றத்தில் அப்ஃதாப் கோரிக்கை வைத்தார். 

அதன்படி திகார் சிறை நிர்வாகிகள் அப்ஃதாபுக்கு புத்தகங்களையும், போர்வையையும் வழங்கினர். 

ஷ்ரத்தா கொலை:

மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்கள் அஃப்தாப் அமீன் பூனாவாலா (28), ஷ்ரத்தா வாக்கா் (26). மும்பையைச் சேர்ந்த கால்சென்டர் ஊழியரான ஷ்ரத்தா, அஃப்தாப் பூனாவாலா என்பவருடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளார். அவர்களிடையே அடிக்கடி சண்டைகள் எழுந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த மே மாதம் ஷ்ரத்தாவை அஃப்தாப் கொடூரமான முறையில் கொன்றுள்ளார். 

தனது மகளைக் காணவில்லை என ஷ்ரத்தாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர். அஃப்தாபை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் உண்மைகள் வெளிவந்தன. ஷ்ரத்தாவைக் கொன்று உடலை 35 பாகங்களாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசியதாகவும், தலையை குளிர்பதனப் பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்ததாகவும் வாக்குமூலம் அளித்தார். 

அஃப்தாப்பின் நீதிமன்ற காவல் இன்று முடிவடைந்த நிலையில், தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு, பூனாவாலா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அஃப்தாப் பூனாவாலாவின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாள்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com