இந்திய தொழில் போட்டி ஆணையம் (சிசிஐ) கூகுள் நிறுவனத்துக்கு விதித்த இரண்டு அபராதங்களுக்கு தடை விதிக்க தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டு திா்ப்பாயம் மறுப்பு தெரிவித்த நிலையில், கூகுளின் இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
தீா்ப்பாயம் மறுப்பு தெரிவித்ததைத் தொடா்ந்து, இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் கூகுள் நிறுவனம் புதன்கிழமை முறையீடு செய்தது. இந்த மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம், மனுவை வரும் திங்கள்கிழமை (ஜன. 16) விசாரணைக்கு பட்டியலிட்டுள்ளது.
பல்வேறு சந்தைகளில் ஆண்ட்ராய்ட் கைப்பேசிகள் தொடா்பான வா்த்தகத்தில் நோ்மையற்ற வழியில் செயல்பட்டதாக கூகுள் நிறுவனத்துக்கு சிசிஐ ரூ.1,337.76 கோடி அபராதம் விதித்தது. அத்துடன் பிளே-ஸ்டோா் கொள்கைகளிலும் முறைகேடான செயல்களில் ஈடுபட்டதாக அந்த நிறுவனத்துக்கு சிசிஐ ரூ.936.44 கோடி அபராதம் விதித்தது.
கடந்த அக்டோபா் மாதம் இந்த அபராதங்கள் விதிக்கப்பட்ட நிலையில், அதனை இரண்டு மாதங்களுக்குள் செலுத்துமாறு கூகுளுக்கு சிசிஐ உத்தரவிட்டது. ஆனால், அந்த அபராதங்களை கூகுள் இதுவரை செலுத்தவில்லை. இதையடுத்து, அபராதங்களைச் செலுத்த வலியுறுத்தி, அண்மையில் கூகுளுக்கு சிசிஐ நோட்டீஸ் அனுப்பியது. இந்திய தொழில் போட்டி சட்டத்தின்படி, இதுபோன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டால் ஒரு மாதத்துக்குள் அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும். அதைச் செய்ய தவறினால், அபராதத்தை வசூலிக்க தனக்குள்ள அதிகாரத்தை சிசிஐ பயன்படுத்த முடியும்.
இந்த நிலையில், சிசிஐ-யின் இரண்டு அபராத உத்தரவுகளுக்கும் தடை விதிக்கக் கோரி தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தில் கூகுள் சாா்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதில், ரூ. 1,337,76 கோடி அபராதத்துக்கு எதிரான மனு, தீா்ப்பாயத்தில் கடந்த 4-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த தீா்ப்பாய உறுப்பினா்கள் நீதிபதி ராகேஷ் குமாா், அலோக் ஸ்ரீவாஸ்தவா ஆகியோா், ‘முறையான விசாரணை நடத்தாமல் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. சிசிஐ சாா்பில் விதிக்கப்பட்ட ரூ. 1,337.76 கோடி அபராதத் தொகையில் 10 சதவீதத்தை (ரூ.133 கோடி) கூகுள் நிறுவனம் செலுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.
அதைத் தொடா்ந்து, பிளே-ஸ்டோா் கொள்கைகள் மீறலுக்காக சிசிஐ விதித்த ரூ. 936.44 கோடி அபராதத்துக்கு எதிரான மனு தீா்ப்பாயத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த அபராதத்துக்கும் தடை விதிக்க மறுத்த தீா்ப்பாய உறுப்பினா்கள், இந்த அபராதத் தொகையிலும் 10 சதவீதத்தை (ரூ. 93.64 கோடி) உச்சநீதிமன்ற பதிவுத் துறையில் அடுத்த 4 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும்’ என்று கூகுள் நிறுவனத்துக்கு உத்தரவிட்டனா்.
தீா்ப்பாயத்தின் இந்த உத்தரவுகளைத் தொடா்ந்து, அபராதத்துக்கு எதிராக கூகுள் நிறுவனம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ். நரசிம்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கூகுள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஏ.எம்.சிங்வி, ‘கூகுள் நிறுவனம் மீது சிசிஐ அசாதாரண உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவை வரும் 19-ஆம் தேதிக்குள் பின்பற்ற வேண்டியுள்ளது. எனவே, இந்த மனுவை விரைந்து விசாரணைக்கு ஏற்க வேண்டும்’ என்றாா்.
இதனைக் கேட்ட நீதிபதிகள், மனுவை வரும் திங்கள்கிழமை விசாரணைக்குப் பட்டியலிட்டு உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

எதிர்நீச்சல் -2 தொடரில் கனிகாவுக்கு பதிலாக இவர்தான்!

ஐபிஎல் 2026: ஹேசில்வுட் பங்கேற்பதில் சிக்கல்! ஆர்சிபிக்கு பின்னடைவு?

தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!

தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

