புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஒற்றைத் தலைமை ஏன்? உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அவைத் தலைவர் விளக்கம்

இரட்டைத் தலைமைக்குப் பதில் ஒற்றைத் தலைமை முறை கொண்டுவரப்பட்டது பற்றி உச்ச நீதிமன்றத்தில்  அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

News image
கோப்புப்படம்
Updated On :11 ஜனவரி 2023, 8:02 am

DIN

இரட்டைத் தலைமைக்குப் பதில் ஒற்றைத் தலைமை முறை கொண்டுவரப்பட்டது பற்றி உச்ச நீதிமன்றத்தில்  அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதிமுக பொதுக் குழு விவகார வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அதிமுக பொதுக்குழவின் நிகழ்ச்சி நிரலில் பன்னீர் செல்வத்தை நீக்குவது இல்லாதபோது பன்னீர் செல்வத்தை எப்படி நீக்கினீர்கள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஜனநாயக அடிப்படையில் பலம் பொருந்திய கட்சியை செயல்பட விடாமல் தடுப்பதை ஏற்க முடியாது. நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் பன்னீர் செல்வம் தவறான தகவல்களை அளித்து வருகிறார் என்று அதிமுக தலைமை அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கட்சியில் எந்த ஆதாரவும் இல்லாத ஒருவர் பொதுக்குழு கூட்டத்தையும் முடிவையும் எதிர்ப்பது அடிப்படையற்றது என்று அதிமுக தலைமை அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரட்டைத் தலைமைக்குப் பதில் ஒற்றைத் தலைமை முறை கொண்டுவரப்பட்டது பற்றி உச்ச நீதிமன்றத்தில்  அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதில், இரட்டைத் தலைமை முடிவுகள் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் ஒற்றைத் தலைமை கொண்டுவரப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் பன்னீர் செல்வத்தைவிட பழனிசாமிக்கே அதிக ஆதரவு இருந்தது.

பொதுக்குழுவில் உரிய விதிமுறைகளை பின்பற்றியே ஒற்றைத் தலைமை  குறித்து முடிவெடுக்கப்பட்டது. பொதுக்குழுவே உச்சபட்ச அதிகாரம் படைத்தது. அதன் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்பது விதி. பொதுக்குழுவை எப்போது வேண்டுமானலும் கூட்டலாம் என்று அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி வாதிட்டார்.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான விசாரணையை பிற்பகல் 2 மணிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.