ரயிலில் இறங்கும்போது தவறி விழுந்த கர்ப்பிணிப் பெண்! காப்பாற்றிய காவலர்கள்!!
மும்பையில் ரயிலிலிருந்து இறங்கும்போது தவறி குப்புற விழுந்த கர்ப்பிணிப் பெண்ணை காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினர்.


மும்பையில் ரயிலிலிருந்து இறங்கும்போது தவறி குப்புற விழுந்த கர்ப்பிணிப் பெண்ணை காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினர்.
மகாராஷ்டிர மாநிலத்தின் நலசோபரா பகுதியைச் சேர்ந்தவர் பூஜா அஜய் சோனி. 40 வயது நிறைமாத கர்ப்பிணியான இவர், தனது சகோதரியுடன் மும்பை சென்றுகொண்டிருந்தபோது, ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததன் காரணமாக மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டியில் ஏறியுள்ளார்.
பின்னர் ரயிலிலிருந்து இறங்கும்போது கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் வயிற்றுப் பகுதி தரையில் மோதியதால், மிகுந்த வலியில் அவர் துடித்துள்ளார்.
இதனைக் கண்ட ரயில்வே போலீஸார் உடனடியாக செயல்பட்டு சக்கர நாற்காலியுடன் வந்து கர்ப்பிணியை நடைமேடை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டது. எனினும் வலி அதிகமாக இருந்ததால், அருகிலிருந்த மருத்துவமனைக்கு கர்ப்பிணிப் பெண் அனுப்பிவைக்கப்பட்டார்.
அங்கு ஒலி அலைகளைக் கொண்டு உள்ளுறுப்புகளையும் குழந்தையையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்து அனுப்பிவைத்தனர்.
கர்ப்பிணிப் பெண் வலியில் துடிக்கும்போது விரைந்து செயல்பட்ட காவல் துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...