ஜார்க்கண்டில் காவலருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே மோதல்!

ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே வியாழக்கிழமை மோதல் ஏற்பட்டது.
ஜார்க்கண்டில் காவலருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே மோதல்!

ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே வியாழக்கிழமை மோதல் ஏற்பட்டது.

மாவட்டத்தின் மானாடு காவல் நிலையப் பகுதியில் இரு தரப்பினரும் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

மாவோயிஸ்டுகள் அங்குள்ள காட்டின் வழியாக தப்பிச் சென்றதாகவும், அவர்களில் சிலர் காயம் அடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் ஏர்கன் உள்ளிட்ட பல பொருள்களை போலீசார் கைப்பற்றினர். சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை மோதல் நீடித்ததாக மாவட்ட ஆய்வாளர் சந்தன் குமார் சின்ஹா தெரிவித்தார்.

காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) TSPC இன் உயர்மட்ட கமாண்டர் சஷிகாந்தின் படை அப்பகுதியில் காணப்படுவதாக தகவல் கிடைத்தது, அதைத் தொடர்ந்து அங்கு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com