கேரளத்தில் இனி முகக்கவசம், சமூக இடைவெளி கட்டாயம்!

பொது இடங்கள், பணியிடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவதை இனி கட்டாயமாக்கி கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read


திருவனந்தபுரம்: பொது இடங்கள், பணியிடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவதை இனி கட்டாயமாக்கி கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனவரி 12ஆம் தேதியிட்ட அதன் உத்தரவில், மாநிலத்தில் கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அரசு அனைவரிடமும் கேட்டுகொண்டுள்ளது.

இது தவிர, கடைகள், திரையரங்குகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவர்கள் தங்கள் கைகளை கழுவுவதற்கும், கிருமிநாசினியை பயன்படுத்துவதற்கும், வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாப்பதை உறுதிசெய்யும் வகையில் ஏற்பாடு செய்யுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் தொற்று அதிகரிப்பதை குறித்த கவலை தெரிவித்துள்ள நிலையில், இந்த உத்தரவு ஜனவரி 12, 2023 முதல் 30 நாட்களுக்கு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com