அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

கோவாவில் ரெஸ்டாரண்டில் குண்டுவெடிப்பு: 7 வீடுகள் சேதம்!

கோவா தலைநகர் பானாஜி அருகே உள்ள மபூசா பகுதியில் பாருடன் கூடிய ரெஸ்டாரண்டில் ஞாயிற்றுக்கிழமை குண்டு வெடித்தது போன்று பயங்கர சத்தம் கேட்டது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:17 am IST


பானாஜி: கோவா தலைநகர் பானாஜி அருகே உள்ள மபூசா பகுதியில் பாருடன் கூடிய ரெஸ்டாரண்டில் ஞாயிற்றுக்கிழமை குண்டு வெடித்தது போன்று பயங்கர சத்தம் கேட்டது. இதில் பாரையொட்டி இருந்த ஒரு பங்களா மற்றும் 7 குடியிருப்புகள், 6 வாகனங்கள் சேதமடைந்தன.

சம்பவத்தின் போது வளாகத்தில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், ரூ.40 லட்சம் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கோவா ரெஸ்டாரண்ட் பாரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பு, அங்கிருந்த சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்டிருக்காலம் என தெரிவித்தனர். ஆனால், சம்பவ இடத்தில் 2 சிலிண்டர்கள் அப்படியே இருந்தது.

சம்பவ இடத்திற்கு  தடயவியல் நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கும் நிபுணர்கள் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சிசிடிவியில் பதிவான காட்சிகளும் சரிபார்க்கப்பட்டு வருவதாக” அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், பாரில் மின் விபத்துகளோ அல்லது ஏ.சி. வெடித்தது போன்ற அறிகுறிகளோ, வெடிபொருட்களோ எதுவும் சிக்கவில்லை. எனவே அங்கு வெடித்தது என்ன? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றனர்.

இது குறித்து துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜிவ்பா தல்வி திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், விசாரணை நடைபெற்று வருகிறது, அது முடிந்ததும் கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.