
மீண்டும் நாடகம்! பாகிஸ்தான் அமைச்சரிடமிருந்து கோப்பை வாங்க மறுத்த இந்திய அணியை விமர்சித்த காங்கிரஸ்!
பாகிஸ்தான் அமைச்சரிடமிருந்து கோப்பை வாங்க மறுத்த இந்திய அணியை காங்கிரஸ் விமர்சித்தது பற்றி...
பாகிஸ்தான் அமைச்சரிடமிருந்து கோப்பை வாங்க மறுத்த இந்திய அணி - X
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தற்போதைய தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவருமான மோசின் நக்வியிடமிருந்து கோப்பையை வாங்க மறுத்த இந்திய கிரிக்கெட் அணியை காங்கிரஸ் நிர்வாகி உதித் ராஜ் விமர்சித்துள்ளார்.
மகளிருக்கான 10-ஆவது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி, கோப்பையைக் கைப்பற்றியது.
இந்த நிலையில், நேற்றிரவு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தற்போதைய தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவருமான மோசின் நக்வியின் கையால் வெற்றிக் கோப்பையைப் பெற இந்திய மகளிா் அணி மறுத்துவிட்டது.
இதனை விமர்சித்து காங்கிரஸ் நிர்வாகி உதித் ராஜ் பேசியிருப்பதாவது:
“மீண்டும் மோசமான, செயற்கையான நாடகம் நடந்துள்ளது. பாகிஸ்தான் அணியினர் ஏற்கெனவே இந்தியாவுக்கு வந்து, இங்கே தங்கி விளையாடிக்கொண்டிருக்கும் நிலையில், அவரது கையிலிருந்து கோப்பையைப் பெற்றுக்கொள்ள மறுப்பது என்பது வெறும் நாடகமே தவிர வேறில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே கடந்த ஆண்டு இந்திய ஆடவா் அணி ஆசிய கோப்பை போட்டியில் சாம்பியன் ஆனபோதும், இதேபோல் மோசின் நக்வி கையால் கோப்பை பெற மறுத்தது நினைவுகூரத்தக்கது.
இதனிடையே, தில்லியில் நேற்றிரவு நடைபெற்ற இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது, தேசிய கீதத்துக்கு முன்னதாக, முதல்முறையாக வந்தே மாதரம் பாடல் முழுமையாகப் பாடப்பட்டதற்கும் உதித் ராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
“வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டதில் என்ன பலன் இருக்கிறது? இதனால் வேலைவாய்ப்பு கிடைக்கப் போகிறதா? இந்திய அணியினர் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள் என்பதுதான் விஷயம். அவர்களின் வெற்றிக்காக வாழ்த்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Drama again! Congress criticizes the Indian team for refusing to accept the trophy from a Pakistani minister!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





