75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா!

உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய ஆடவர் அணி நெதர்லாந்திடம் தோல்வியுற்றது பற்றி....

India lose 1-3 to the Netherlands in FIH Hockey WC

உலகக் கோப்பை ஹாக்கி தொடர்.

Published On :22 ஆகஸ்ட் 2026, 10:17 pm IST

உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய ஆடவா் அணி, நெதர்லாந்திடம் தோல்வியைத் தழுவியது.

உலக கோப்பை ஹாக்கி தொடரின் 2-வது சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி ஒலிம்பிக் சாம்பியனான நெதர்லாந்து அணியை இன்று எதிர்கொண்டது. நெதா்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் இரண்டு குவாட்டர்களில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

இந்த நிலையில் ஆட்டத்தின் 41வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் வீரர் டுகோ டெல்கென்கேம்ப் முதல் ஃபீல்டு கோலைப் பதிவு செய்தார். தொடர்ந்து அந்த அணியின் வீரர்கள் ஜெப் ஹோட்மேக்கர்ஸ் 51வது நிமிடத்திலும், தைஜஸ் வான் டாம் 55வது நிமிடத்திலும் அடுத்தடுத்து ஃபீல்டு கோல்கள் அடிக்க நெதர்லாந்து 3-0 என்கிற கணக்கில் முன்னிலை வகித்தது.

இந்திய அணி தரப்பில், 52வது நிமிடத்தில் கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பைப் பயன்படுத்தி கேப்டன் ஹா்மன்பிரீத் சிங் ஒரே ஒரு கோல் மட்டும் அடித்தார். ஆனால் எஞ்சிய நேரத்தில் இந்தியாவுக்கு மேலும் கோல் வாய்ப்பு கிடைக்காமல் போக முடிவில் நெதர்லாந்து 3-1 கோல் கணக்கில் வென்றது.

Summary

The Indian men's hockey team lost 1-3 to Olympic champions the Netherlands in a must-win second round match of the FIH World Cup here on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.