
பழம்பெரும் கன்னட நடிகர் லக்ஷ்மண் பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் திங்கள்கிழமை காலமானார்.
74 வயதான லக்ஷ்மண்க்கு ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்படவே உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், ஈசிஜி பரிசோதனைக்கு பின் அவர் வீடு திரும்பினார்.
இதையும் படிக்க- நேபாள விமான விபத்து: உ.பி.யைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பு
ஆனால் வீடு திரும்பிய அவர் திங்கள்கிழமை அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். லக்ஷ்மண் உடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. லக்ஷ்மண், 200க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார்.
மேலும் மறைந்த டாக்டர் ராஜ்குமார், மறைந்த அம்பரீஷ், மறைந்த விஷ்ணுவர்தன் உட்பட கன்னட திரையுலகின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் லக்ஷ்மண் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...