பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தில்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தலைநகர் தில்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

News image
கோப்புப்படம்
Updated On :24 ஜனவரி 2023, 9:29 am

DIN

தலைநகர் தில்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

தில்லியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் நேபாளத்தை மையமாக் கொண்டு  ரிக்டர் அளவுகோளில் 5.8 ஆக பதிவாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 30 வினாடிகள் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் பாதிப்பு உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தானிலும் உணரப்பட்டதாக  தகவல் வெளியாகியுள்ளது. 

நிலநடுக்கம் காரணமாக தில்லியின் பல்வேறு இடங்களில் கட்டங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.