பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மோடி மீதான கேள்வி: பிபிசியின் 2-வது ஆவணப்படம் வெளியீடு

2002 குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடித் தொடர்பு உள்ளதாக வெளியான ஆவணப் படத்தின் இரண்டாவது பாகத்தை பிபிசி வெளியிட்டுள்ளது.

News image
மோடி மீதான கேள்வி: பிபிசியின் 2-வது ஆவணப்படம் வெளியீடு
Updated On :25 ஜனவரி 2023, 10:52 am

DIN

2002 குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடித் தொடர்பு உள்ளதாக வெளியான ஆவணப் படத்தின் இரண்டாவது பாகத்தை பிபிசி வெளியிட்டுள்ளது.

"மோடி கேள்வி" பற்றிய பிபிசி ஆவணப்படம் இரண்டாம் பாகத்தின் நல்ல இணைப்பு கிடைத்துள்ளது என்று மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் தனது டிவிட்டர் பக்கத்தில் விடியோவை இணைத்துள்ளார். 

''இந்தியா: மோடி மீதான கேள்வி'' (பகுதி -1) என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தில் 2002ஆம் ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதத்தில் நடைபெற்ற குஜராத் கலவரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் மோடி ஆட்சியில் இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்து ஆவணப்படுத்தப்பட்டிருந்தது.

இந்தியா: மோடி மீதான கேள்வி இரண்டாம் பாகத்தின் விடியோ, " இந்த சம்பவத்தில் தொடர்புடைய 30க்கும் மேற்பட்டோர், இந்த ஆவணப்படத்தில் பங்கேற்க மறுத்துவிட்டனர். 

காரணம், அவர்களது பாதுகாப்புக் கருதி.

இதில் கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்துக் கூறவும் இந்திய அரசு மறுத்துவிட்டது என்ற பதிவுடன் தொடங்குகிறது.
 

இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், யூடியூப் விடியோ மற்றும் அதன் இணைப்புகளைக் கொண்ட டிவிட்டர் பகுதிகளை முடக்கி மத்திய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாவது ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

குஜராத்தின் கோத்ரா நகரில் 2002-ஆம் ஆண்டு கலவரம் ஏற்பட்டது. அதில் நூற்றுக்கணக்கானோா் கொல்லப்பட்டனா். அப்போது மாநில முதல்வராக நரேந்திர மோடி இருந்தாா். குஜராத் கலவரம் தொடா்பாக பிபிசி நிறுவனம் ஆவணப்படம் எடுத்தது. அதன் முதல் பாகம் அண்மையில் வெளியாகி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

ஆவணப்படத்தில் மோடி குறித்து பல்வேறு ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில்தான், தற்போது இரண்டாவது பாகம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த விடியோ யூடியூப்பில் வெளியாகாமல் புதிய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

குஜராத்தில் ஹிந்து-முஸ்லிம் சமூகத்தினா் இடையே 2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த மோதல் குறித்து ‘இந்தியா: தி மோடி க்வஷின்’ என்ற ஆவணப்படத்தை பிபிசி உருவாக்கியது. இரண்டு பாகங்களைக் கொண்ட அந்த ஆவணப்படத்தின் இரண்டு பாகங்களும்  வெளியிடப்பட்டுள்ளது.

குஜராத் கலவரத்தில் அப்போதைய முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு நேரடித் தொடா்பிருப்பதாக அதில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இது சா்வதேச அளவில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆவணப்படம் வெற்றுப் பிரசாரம் என வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்திருந்தது. அதே வேளையில், விரிவான ஆய்வுக்குப் பிறகே ஆவணப்படம் உருவாக்கப்பட்டதாக பிபிசி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.