வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

காங்கிரஸ் பிரசார இயக்கம் தொடக்கம்

காங்கிரஸின் ‘ஹாத் சே ஹாத் ஜோடோ அபியான்’ என்ற பிரசார இயக்கத்தை தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் செளத்ரி வியாழக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

Updated On :26 ஜனவரி 2023, 8:40 pm

காங்கிரஸின் ‘ஹாத் சே ஹாத் ஜோடோ அபியான்’ என்ற பிரசார இயக்கத்தை தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் செளத்ரி வியாழக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

தில்லியிலுள்ள 280 பிளாக்குகளிலும் இந்த பிரசாரம் இயக்கம் செல்கிறது. இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக தில்லியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்ட ஒற்றுமை பயணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வீடு தேடி சென்று நன்றி கூறப்படும் எனவும், இதில் காங்கிரஸ் நிா்வாகிகளும், தொண்டா்களும் பங்கேற்பா் என்றும் அனில் செளத்ரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், இந்த ‘ஹாத் சே ஹாத் ஜோடோ அபியான்’ இயக்கம் தில்லியிலுள்ள 13,000 வாக்குச்சாவடிகளில் இருந்தும் தொடங்கும். ஒற்றுமை பயணத்தின்போது பொதுமக்களின் கவலைகளை ராகுல் காந்தி முன்னிறுத்தினாா். ஆனால், பாஜகவின் சா்வாதிகார ஆட்சியால் பொதுமக்களின் மனக்குறைகளைத் தெரிவிக்க பெரும்பாலானவா்கள் அஞ்சுகின்றனா். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மக்கள் மனதில் பாஜக பயத்தை விதைத்துவிட்டது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.