ஆக்ராவில் 6 வீடுகள் இடிந்து விழுந்தது: 4 வயது சிறுமி பலி!
உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவின் தர்மசாலாவில் அகழ்வாராய்ச்சி பணியின்போது 6 வீடுகள் இடிந்து விழுந்ததில் நான்கு வயது சிறுமி உயிரிழந்தார்.


உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவின் தர்மசாலாவில் அகழ்வாராய்ச்சி பணியின்போது 6 வீடுகள் இடிந்து விழுந்ததில் நான்கு வயது சிறுமி உயிரிழந்தார். மேலும் சில காயமடைந்தனர்.
இதுகுறித்து துணை ஆணையர் விகாஸ் குமார் கூறுகையில்,
வியாழக்கிழமை காலை 7 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றது. ஆக்ரா ரயில் நிலையம் அருகே உள்ள திலா மைதான பகுதியில் உள்ள தர்மசாலாவில் அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று கொண்டிருந்தது. அதன் காரணமாக ஆறு வீடுகள் மற்றும் ஒரு கோயில் இடிந்து விழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில் மூவர் இடிபாடுகளில் சிக்கினர். சிக்கியவர்கள் விவேக் குமார் மற்றும் அவரது மகள்கள் விதேஹி, ரூசாலி என அடையாளம் காணப்பட்டது.
அவர்களில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும்போது நான்கு வயது சிறுமி ரூசாலி உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...