
குடியரசு தினத்தையொட்டி ஸ்ரீநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தளர்த்தப்பட்டன.
கோடைக்கால தலைநகரான ஜம்மு மற்றும் காஷ்மீரில் குறைந்த அளவில் சோதனைச் சாவகைள் அமைக்கப்பட்டன.
பள்ளத்தாக்கில் முக்கிய விழா நடைபெறும் ஷேர்-இ-காஷ்மீர் கிரிக்கெட் அரங்கத்திற்குச் செல்லும் சாலைகளில் பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
அதேசமயம் நகரின் முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, மக்கள் மற்றும் வாகனங்கள் சுதந்திரமாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2005 சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே பயங்கரவாதிகள் மொபைல் போன் பயன்படுத்தி நாட்டு வெடிகுண்டு வெடித்தனர். அதுமுதல் சுதந்திர தினத்தில் மொபைல் போன் மற்றும் இணையச் சேவைகள் நிறுத்தப்படுவது பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.