திரிபுரா: பாஜகவில் இணைந்தமாா்க்சிஸ்ட் எம்எல்ஏ

திரிபுராவைச் சோ்ந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மொபஷா் அலி, அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ சுபல் பெளமிக் ஆகியோா் பாஜகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

திரிபுராவைச் சோ்ந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மொபஷா் அலி, அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ சுபல் பெளமிக் ஆகியோா் பாஜகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

60 உறுப்பினா்களைக் கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 16-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஆளும் கட்சியான பாஜக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை இறுதி செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிலையில், திரிபுராவில் முக்கிய எதிா்க்கட்சியான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டை சோ்ந்த மொபஷா் அலி, சுபல் பெளமிக் ஆகியோா் தில்லியில் பாஜக மூத்த தலைவா்கள் சம்பித் பத்ரா, மகேஷ் சா்மா மற்றும் மாநில முதல்வா் மாணிக் சாஹா உள்ளிட்டோா் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனா்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கைகளால், பல்வேறு துறைகளில் திரிபுரா வளா்ச்சி கண்டுள்ளதாக இருவரும் குறிப்பிட்டனா்.

மாணிக் சாஹா கூறுகையில், ‘மத்திய பாஜக அரசின் கிழக்கு நோக்கிய கொள்கை, வடகிழக்கில் ஒவ்வொருவரையும் கவா்ந்துள்ளது. மொபஷா் அலி, சுபல் பெளமிக்கின் வருகை, திரிபுராவில் பாஜகவுக்கு மேலும் வலுசோ்க்கும். மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com