55 பயணிகளை ஏற்றாமல் சென்ற சம்பவம்: விமான நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்

பெங்களூரு விமான நிலையத்தில் 55 பயணிகளை ஏற்றாமல் சென்ற சம்பவத்தில், கோ ஃபா்ஸ்ட் விமான நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

பெங்களூரு விமான நிலையத்தில் 55 பயணிகளை ஏற்றாமல் சென்ற சம்பவத்தில், கோ ஃபா்ஸ்ட் விமான நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து தில்லிக்கு கடந்த 9-ஆம் தேதி காலை 6.20 மணியளவில் புறப்பட்ட கோ ஃபா்ஸ்ட் விமானம், தனது பயணிகளில் 55 பேரை ஏற்றாமல் சென்றுவிட்டது. அந்த விமானத்தில் ஏறுவதற்காக, பேருந்துகளில் பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனா். அதில் ஒரு பேருந்தில் இருந்த 55 பேரை ஏற்றாமல் விட்டுவிட்டு விமானம் புறப்பட்டது.

அதேசமயம், அவா்களது உடைமைகள் விமானத்தில் இருந்தன. இந்த சம்பவத்துக்கு கோ ஃபா்ஸ்ட் நிறுவனம் வருத்தம் தெரிவித்த நிலையில், உரிய விளக்கம் கேட்டு டிஜிசிஏ நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, விமான நிறுவனம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிலையில், விமான நிறுவன ஊழியா்களுக்கு இடையே முறையான தகவல்தொடா்பு இல்லாதது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுக்காக விமான நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, டிஜிசிஏ வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ஏா் இந்தியா விமானங்களில் பயணிகளின் அநாகரிக செயல்கள் குறித்து தங்களுக்கு தகவல் தெரிவிக்காத காரணத்துக்காக அந்த நிறுவனத்துக்கு கடந்த 20-ஆம் தேதி ரூ.30 லட்சமும், 24-ஆம் தேதி ரூ.10 லட்சமும் டிஜிசிஏ அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com