நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஹிண்டன்பா்கின் குற்றசாட்டு இந்தியாவின் மீதான தாக்குதல்: அதானி குழுமம்

ஹிண்டன்பா்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை இந்தியா மற்றும் அதன் அமைப்புகள், வளா்ச்சி மீது நிகழ்த்தப்பட்டுள்ள திட்டமிட்ட தாக்குதல் என அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம் (கௌதம் அதானி)

Updated On :30 ஜனவரி 2023, 9:51 pm

DIN

ஹிண்டன்பா்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை இந்தியா மற்றும் அதன் அமைப்புகள், வளா்ச்சி மீது நிகழ்த்தப்பட்டுள்ள திட்டமிட்ட தாக்குதல் என அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயா்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் ரிசா்ச் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவித்தது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அதானி குழுமம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட 413 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இது குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் அல்ல. மாறாக, இந்தியாவின் மீதும், அதன் சுதந்திரம், ஒற்றுமை, ஜனநாயக அமைப்புகளின் தரம், வளா்ச்சிக்கான பாதை மற்றும் இலக்குகளின் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்.

ஹிண்டன்பா்க் ஜன.24-இல் வெளியிட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை. இவை பொய்யான தகவல்கள் மற்றும் அடிப்படை ஆதாரமற்ற, உள்நோக்கத்துடன் கூடிய பொய்யான குற்றச்சாட்டுகளின் தொகுப்பு. முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்தியாவின் மிகப் பெரிய பங்கு வெளியீடுகளில் அதானி குழுமம் வளா்ச்சி அடைந்திருக்கும் வேளையில், இக்குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது ஹிண்டன்பா்கின் நம்பகத்தன்மை மற்றும் நெறிகள் குறித்து கேள்வியெழுப்புகிறது.

இந்தக் குற்றச்சாட்டை வெளியிட்டதற்கான காரணங்களை ஹிண்டன்பா்க் வெளியிடவில்லை. சுயநலத்தை நோக்கமாக கொண்டு வெளியிடப்பட்டுள்ள அந்த ஆய்வறிக்கை, பத்திரங்கள் மற்றும் அந்நிய செலாவணி சட்டங்களின் மீறலாகும்.

ஹிண்டன்பா்க் நிறுவனத்தால் எழுப்பப்பட்ட 88 கேள்விகளில், 65 கேள்விகளுக்கு உரிய அமைப்புகளிடம் ஏற்கெனவே விளக்கம் அளித்து அதானி குழுமம் அறிக்கை அளித்துள்ளது. மீதமுள்ள 23 கேள்விகளில், 18 கேள்விகள் பங்குதாரா்கள் மற்றும் அதானி குழுமத்தைச் சாராத நிறுவனங்கள் பற்றியவை. மற்றுமுள்ள 5 கேள்விகள் அடிப்படையற்ற, கற்பனையான தரவுகளைக் கொண்ட குற்றச்சாட்டுகள் என அதானி குழுமம் தனது அறிக்கையில் தெரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.