பணவீக்கம், வேலையின்மை குறித்து கேள்வி எழுப்புவோம்: காங்கிரஸ்

பட்ஜெட் கூட்டத்தொடரில் பணவீக்கம், வேலையின்மை, எல்லை விவகாரம் உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்புவோம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 
மல்லிகார்ஜுன கார்கே (கோப்புப் படம்)
மல்லிகார்ஜுன கார்கே (கோப்புப் படம்)

பட்ஜெட் கூட்டத்தொடரில் பணவீக்கம், வேலையின்மை, எல்லை விவகாரம் உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்புவோம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வு ஜன.31-ல் தொடங்கி பிப்ரவரி 13 வரை நடைபெறவுள்ளது.  பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்கிய நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 

ஆண்டின் முதல் உரை என்பதால், இரு அவை உறுப்பினர்கள் மத்தியில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். அப்போது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவையில் இல்லை. 

இந்நிலையில், தில்லியில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, குடியரசுத் தலைவரின் முதல் உரையை முழுமையாக கேட்க வேண்டும் என ஆவலாக வந்தேன். ஆனால், வானிலை காரணமாக தாமதமானது. அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பணவீக்கம், வேலை வாய்ப்பின்மை, எல்லை பிரச்னை உள்ளிட்டவை குறித்து அவையில் கேள்வி எழுப்புவோம். 

மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்காத விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்புகிறோம். ஆனால் மத்திய அரசு அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுகிறது. நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியை பாராட்டாவிட்டாலும், இகழ்வதிலேயே குறியாக உள்ளது. இது யாருக்கும் நன்மை சென்று சேருவதை பாஜக விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது எனக் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com