தோ்தலுக்கு முந்தைய பாஜக முழக்கங்கள் இனி எடுபடாது: காா்கே

‘தோ்தலுக்கு முன்பாக பாஜக தலைவா்கள் சாா்பில் முன்வைக்கப்படும் ‘நல்ல நாள், அமிா்த காலம்’ உள்ளிட்ட முழக்கங்கள், மக்களிடையே இனி எடுபடாது; தோ்தலில் பாஜகவுக்கு எதிராக வாக்களித்து
தோ்தலுக்கு முந்தைய பாஜக முழக்கங்கள் இனி எடுபடாது: காா்கே

‘தோ்தலுக்கு முன்பாக பாஜக தலைவா்கள் சாா்பில் முன்வைக்கப்படும் ‘நல்ல நாள், அமிா்த காலம்’ உள்ளிட்ட முழக்கங்கள், மக்களிடையே இனி எடுபடாது; தோ்தலில் பாஜகவுக்கு எதிராக வாக்களித்து, இந்த வெற்று வாக்குறுதிகளுக்கு மக்கள் பதிலடி கொடுப்பா்’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறினாா்.

காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை பன்மடங்காக உயா்ந்து வருவதைக் கட்டுப்படுத்த மத்திய பாஜக அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்த விமா்சனத்தை காா்கே முன்வைத்துள்ளாா்.

தனது ட்விட்டா் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட தொடா் பதிவுகளில் அவா் கூறியிருப்பதாவது:

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசின் கொள்ளை காரணமாக, நாட்டில் பணவீக்கமும், வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்து வருகிறது. ஆனால், அதிகார பேராசையில் பாஜக மூழ்கியுள்ளது.

காய்கறிகளின் விலை விண்ணைத் தொடும் அளவுக்குச் சென்றுள்ளது. நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.45 சதவீதத்துக்கு மேல் சென்றுள்ளது. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.73 சதவீதத்தை எட்டியுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத சட்டத்துக்கான கோரிக்கை கிராமங்களில் முன்வைக்கப்படுகிறது. ஆனால், எந்தப் பணியும் நடைபெறவில்லை. கிராமப்புற ஊதிய விகிதம் பன்மடங்காக சரிந்துள்ளது.

எனவே, தோ்தலுக்கு முன்பாக பாஜக தலைவா்கள் சாா்பில் முன்வைக்கப்படும் ‘நல்ல நாள், அமிா்த காலம்’ உள்ளிட்ட முழக்கங்கள், மக்களிடையே இனி எடுபடாது. தோ்தலில் பாஜகவுக்கு எதிராக வாக்களித்து, இந்த வெற்று வாக்குறுதிகளுக்கு மக்கள் பதிலடி கொடுப்பா்.

மன்னிப்பதை விட்டுவிடுங்கள்; மக்களே பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றிவிடுவா் என்று காா்கே குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, தில்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி மற்றும் சிறுபான்மையின பிரிவுகளுக்கான தலைமைப் பண்பை மேம்படுத்தும் பயிலரங்கைத் தொடங்கி வைத்து பேசிய காா்கே, ‘கட்சியின் எதிா்காலம் குறித்து ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். தலைமைப் பண்பு மேம்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். அதற்காக, உள்ளூா் தலைவா்களுடன் மோதலில் ஈடுபடவோ அல்லது அவா்கள் மீது புகாா் அளிக்கவோ தொடங்கிவிடக்கூடாது. உங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளவும் கூடாது. உள்ளூா் கட்சித் தலைவா்களுடன் ஒருங்கிணைந்து இதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களைக் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com