நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பல நகரங்களில் பெட்ரோல் விலையை விட அதிகரித்த தக்காளி விலை!

இந்திய சந்தையில் தக்காளி விலை உயர்ந்து, கிலோவுக்கு ரூ.100-ஐ தாண்டிய நிலையில், நாட்டின் முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசல் விலையை தாண்டி விற்பனையாகி வருகிறது. 

News image
Updated On :5 ஜூலை 2023, 4:03 pm

DIN

இந்திய சந்தையில் தக்காளி விலை உயர்ந்து, கிலோவுக்கு ரூ.100-ஐ தாண்டிய நிலையில், நாட்டின் முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசல் விலையை தாண்டி விற்பனையாகி வருகிறது. 

மும்பை மற்றும் தில்லியில் பெட்ரோல் விலைகளுடன் ஒப்பிடும்போது - லிட்டருக்கு ஒன்றுக்கு ரூ.106.31 மற்றும் ரூ.96.72 விற்பனையாகி வருகிறது. பெருநகரங்களில் தக்காளி விலை  ஒரு கிலோவுக்கு ரூ.140-க்கு விற்பனையாகி வருகிறது.

இந்திய சந்தையில், சமீபத்தில் வெயிலின் தாக்கம் மற்றும் மழையால், தக்காளி விளையும் மாநிலங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டதால், தக்காளி விலை உயர்ந்தது. 

தக்காளியை விட பெட்ரோல் மலிவாக இருக்கும் நகரங்களின் பட்டியல் இங்கே வழங்கியுள்ளோம்:

1) தில்லி : தக்காளி ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை | பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.96.72 காசுகள்.

2) மும்பை : தக்காளி ஒரு கிலோ ரூ.110 | பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ .106.31 காசுகள்.

3) பெங்களூரு : தக்காளி ஒரு கிலோ ரூ.100 |  பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.101.94 காசுகள்.

4) கொல்கத்தா : தக்காளி ஒரு கிலோ ரூ.148  | பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.106.03 காசுகள்.

5) சென்னை: தக்காளி ஒரு கிலோ ரூ.117 முதல் ரூ.120 வரை |  பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.63 காசுகள்.

6) சிலிகுரி: தக்காளி ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.160 வரை | பெட்ரோல் ஒரு லிட்டர்- ரூ.106.03 காசுகள்.

7) மொராதாபாத்: தக்காளி ஒரு கிலோ ரூ.150 | பெட்ரோல் ஒரு லிட்டர் - ரூ.96.83 காசுகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.