
வருடாந்திர அமர்நாத் யாத்திரை தொடங்கியுள்ள நிலையில், பயணிகள் உற்சாகமாக குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசித்து வருகின்றனர்.
62 நாள்கள் நிகழும் அமர்நாத் யாத்திரை ஜூலை 1-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆகஸ்ட் 31 வரை பனி லிங்கத்தை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 5 நாள்களில் மட்டும் சுமார் 67 ஆயிரம் பேர் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
அமர்நாத் யாத்திரையில் கலந்துகொள்ளும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பிற்காக சிஆர்பிஎப், ஜம்மு-காஷ்மீர் போலீஸ், இந்திய ராணுவம் மற்றும் பிஎஸ்எப் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பயங்கரவாத அச்சுறுத்தலைத் தவிர்க்கும் வகையில் சர்வதேச எல்லையிலிருந்து கட்டுப்பாடு கோடு வரையிலும் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் உள்ளனர்.
அமர்நாத் யாத்திரையின்போது பயணிகள் கடைபிடிக்க வேண்டியவை!
அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றினால், எந்தவித சிரமமும் இன்றி பாதுகாப்பாக பயணிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.