

தில்லியில் ராஜஸ்தான் மாநில தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
நடப்பாண்டு இறுதியில் ராஜஸ்தான், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், தெலங்கானா, மிஸோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது.
இதையொட்டி அந்தந்த மாநில நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கெனவே சத்தீஸ்கர், தெலங்கானா மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் இன்று ராஜஸ்தான் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.
தில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.
ராஜஸ்தான் முதல்வரும் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட், கால் பெருவிரலில் காயம் காரணமாக, காணொலி மூலமாக இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் வியூகம், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.