லாரிகளில் இனி ஏ.சி.! ஒப்புதல் அளித்தது மத்திய அரசு!!

லாரிகளில் குளிர்சாதன வசதி ஏற்படுத்த வேண்டியது கட்டாயம் என்ற அறிவிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
லாரிகளில் இனி ஏ.சி.! ஒப்புதல் அளித்தது மத்திய அரசு!!

லாரிகளில் குளிர்சாதன வசதி ஏற்படுத்த வேண்டியது கட்டாயம் என்ற அறிவிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இதன்படி என்-1 மற்றும் என்-2 ஆகிய ரக லாரிகளில் குளிர்சாதன வசதி ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

லாரிகளில் விரைவில் குளிா்சாதன (ஏ.சி.) வசதி கட்டாயமாக்கப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி முன்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது அதை உறுதிப்படுத்தியுள்ளார். 

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அமைச்சர் நிதின் கட்கரி, சாலை பாதுகாப்பை உறுதி செய்வதில் லாரி ஓட்டுநர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். லாரி ஓட்டுநர்களுக்கு இணக்கமான பணிச்சூழலை உருவாக்கிக் கொடுக்கும் இந்த நடவடிக்கை ஒரு மைல்கல்லாக அமையும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

என்-1 வகை லாரிகள் அதிகபட்சம் 3.5 டன் எடைக்கும் குறைவானவை. 
என்-2 வகை லாரிகள் குறைந்தபட்சம் 3.5 டன் எடையும் அதிகபட்சம் 12 டன் எடையும் கொண்டவது. இந்த இரு ரக லாரிகளில் குளிர்சாதனப் பெட்டி பொருத்த வேண்டியது இதன்மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com