மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒரு கிலோ தக்காளி ரூ. 250! எங்கு தெரியுமா?

நாட்டில் ஒரு மாநிலத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ. 250-க்கு விற்பனை செய்யப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :7 ஜூலை 2023, 12:22 pm

உத்தரகண்டில் ஒரு கிலோ தக்காளி ரூ. 250-க்கு விற்பனை செய்யப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாட்டின் ஒரு சில பகுதிகளில் கனமழை, கடந்த சில மாதங்களில் வெப்பம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. 

இதனால் நாடு முழுவதும் தக்காளி விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. பல பகுதிகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 100-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், நாட்டில் அதிகபட்சமாக உத்தரகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தாம் பகுதியில் ஒரு கிலோ தக்காளி ரூ. 250க்கு விற்பனை செய்யப்படுகிறது. உத்தரகாசியில் ரூ. 180 முதல் ரூ.200 வரை விற்பனையாகிறது. 

சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 100 முதல் 130 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.