ஓடிடி தளங்களுக்குத் தடை? பரிந்துரைகளை வழங்க அறிவுறுத்தல்!!
நாட்டில் சில ஓடிடி தளங்களை தடை செய்யும் வகையில் ஒழுங்குமுறை பணிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.


நாட்டில் சில ஓடிடி தளங்களை தடை செய்யும் வகையில் ஒழுங்குமுறை பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெள்ளிக்கிழமை (ஜூலை 7) வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த விவகாரம் தொடர்பாக பரிந்துரைகளை பரிந்துரைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதில், முன்னணியிலுள்ள சில ஓடிடி தளங்களையும் இணையதளங்களுக்கு நாட்டின் சில குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் கட்டுப்பாடுகளை விதிப்பதில் உள்ள தொழில்நுட்ப சவால்கள் குறித்து கேட்கப்பட்டுள்ளது. மேலும், அத்தகைய சவால்களை சரிசெய்வதற்காக சாத்தியக்கூறுகளை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
படிக்க | த்ரெட்ஸில் இணையும் பிரபலங்கள்!
ஓடிடி தளங்களைத் தவிர்த்து சில இணையதளங்களையும் தடை செய்வதற்கான தேவை உள்ளதா என பங்குதாரர்களிடம் கேட்கப்பட்டுள்ளது.
ஓடிடி தளங்களில் பல்வேறு வகுப்பு அல்லது பிரிவுகளில் விடியோக்கள் உள்ள நிலையில், எந்த வகுப்பில் உள்ள ஓடிடி தளங்கள் தடை செய்ய வேண்டிய வரையறைக்குக் கீழ் வருகிறது எனவும் ஒழுங்குமுறை ஆணையம் கேட்டுள்ளது.
மேலும், வாட்ஸ் ஆப், சிக்னல், மெசேஞ்சர் போன்ற உரிமம் பெற்ற செயலியின் வாயிலாகவும் ஓடிடி சேவையைக் கொண்டுவர உள்ளது.
பயனர்கள் பயன்பெறும் வகையிலும் ஓடிடி நிறுவன போட்டியாளர்கள் லாபம் ஈட்டும் வகையிலும் ஒழுங்குமுறை கட்டமைப்பின் கீழ் ஓடிடி நிறுவனங்களைக் கொண்டுவர ஆணையம் விரும்புகிறது என அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...