ஹிமாச பிரதேசத்தில் கனமழை பெய்துவருவதால் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்.
ஹிமாலத்தில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருவதால், பல மாவட்டத்தில் அதிக சேதம் விளைவித்துள்ளது.
சோலன் மாவட்டத்தின் கசௌலியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று வீடுகள் சேதமடைந்தன. மேலும், அந்த கட்டத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
ஜூலை 8, 9 ஆகிய தேதிகளில் சம்பா, குல்லு, மண்டி, உனா, ஹமிர்பூர் மற்றும் பிலாஸ்பூர் மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்றும், நிலச்சரிவுக்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் எச்சரித்துள்ளது.
ஒரே நாளில் 204 மி.மீ அதிகமான மழை பெய்த நிலையில், அப்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சிம்லா, சிர்மௌர், சோலன், லஹால் உள்ளிட்ட பகுதிகளுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜூலை 13 வரை மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகிறது மூன்றாம் பிறை!

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
ஒரே சார்ஜிங்கில் 180 கி.மீ..! ரூ. 99,999-ல் ஓபன் ரோர் பைக்!

ஓய்விலிருந்து கிளாசனை வெளியே கொண்டு வாருங்கள்: கெவின் பீட்டர்சன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


