குஜராத்: சிங்கம் தாக்கியதில் சிறுவன் காயம்
குஜராத்தின் கிர் சரணாலயத்தில் சிங்கம் தாக்கியதில் 15 வயது சிறுவன் பலத்த காயமடைந்தான்.

கோப்புப் படம்.

கோப்புப் படம்.
குஜராத்தின் கிர் சரணாலயத்தில் சிங்கம் தாக்கியதில் 15 வயது சிறுவன் பலத்த காயமடைந்தான்.
குஜராத் மாநிலம், கிர் சரணாலயப் பகுதியில் விக்ரம் சாவ்தா(15) என்ற சிறுவன் நேற்று கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளான். அப்போது சிறுவனின் பின்னால் இருந்து வந்த சிங்கம் ஒன்று திடீரென தாக்கியது. உடனே அப்பகுதியில் இருந்த மற்ற கால்நடை மேய்ப்பவர்கள் சத்தமிட்டு கத்தியுள்ளனர்.
இதனால் அந்த சிங்கம், சிறுவனை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இருப்பினும் சிங்கம் தாக்கியதில் சிறுவன் விக்ரமிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே காயமடைந்த சிறுவன் அவசர சிகிச்சைக்காக விசாவதாரில் உள்ள சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டான்.
அங்கு சிறுவனின் இடுப்பு மற்றும் முதுகில் எட்டு தையல்கள் போடப்பட்டன. பின்னர் அந்த சிறுவன் மேல் சிகிச்சைக்காக ஜூனாகத் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டான். கால்நடைகளை மேய்க்கச் சென்ற சிறுவனை, சிங்கம் தாக்கிய சம்பவம் கிர் சரணாலய பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...