ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஸ்மார்ட்போன் வாங்கினால் தக்காளி இலவசம்!

ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு தக்காளி இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ள செல்போன் கடை இணையத்தில் வைரலாகியுள்ளது.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:02 pm

DIN

ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு தக்காளி இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ள செல்போன் கடை இணையத்தில் வைரலாகியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த இரு வாரங்களாக தக்காளி விலை ரூ.100-ஐ கடந்து விற்பனையாகி வருகின்றது. ஹிமாசலப் பிரதேசம் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் ரூ.250-க்கு விற்பனையாகிறது.

தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம், அசோக் நகர் பகுதியில் உள்ள செல்போன் கடை ஒன்றில், ஸ்மார்ட்போன் வாங்கினால் இரண்டு கிலோ தக்காளி இலவசம் என கடை உரிமையாளர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கடை உரிமையாளர் அபிஷேக் கூறுகையில், தக்காளி விலை அதிகரித்துள்ள நிலையில், தக்காளியை இலவசமாக வழங்கினால் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க ஒரு வாய்ப்பாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.