மழை பாதிப்பு: உத்தரகண்ட், ஹிமாசல் முதல்வர்களுடன் மோடி பேச்சு!

உத்தரகண்ட் மற்றும் ஹிமாசலப் பிரதேச மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி வாயிலாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மழை பாதிப்பு: உத்தரகண்ட், ஹிமாசல் முதல்வர்களுடன் மோடி பேச்சு!

உத்தரகண்ட் மற்றும் ஹிமாசலப் பிரதேச மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி வாயிலாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மழையால் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பாதிப்புகள் குறித்தும் நிவாரணப் பணிகள் குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வட மாநிலங்களான ஹிமாசல் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களிலும் அதிக அளவு மழை பெய்து வருகிறது. 

ஹிமாசலின் சிம்லா மாவட்டத்தின் தொடர் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று நேர்ந்த நிலச்சரிவில் 3 பேர் உயிரிழந்தனர். மழையால் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

700 சாலைகள் மூடப்பட்டு, 13 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன. 

இதேபோன்று உத்தரகண்ட் மாநிலத்திலும் தொடர் மழை பெய்து வருகிறது. கங்கை போன்ற முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு அபாயகட்டத்தை எட்டியுள்ளது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கில் வீடுகள் அடித்துச்செல்லப்பட்டுள்ளன. 

இந்நிலையில், உத்தரகண்ட், ஹிமாசல் மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மழை பாதிப்பு சேதங்கள் குறித்து கேட்டறிந்த பிரதமர், இரு மாநிலங்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதியளித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com